புதுக்கோட்டை அருகே ஹெலிகாப்டர் வெடித்து விபத்து!

 

புதுக்கோட்டை அருகே ஹெலிகாப்டர் வெடித்து விபத்து!

புதுக்கோட்டை பேயடிக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே ஹெலிகாப்டர் வெடித்து விபத்து!

புதுக்கோட்டை பேயடிக்கோட்டை அருகே செங்காளம் வைந்தலூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயங்கர சத்ததுடன் ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பயணித்தவர்களின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. இதனால் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.