புதிய 1000 ரூபாய் நோட்டுகள்: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

 

புதிய 1000 ரூபாய் நோட்டுகள்: எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால்  இதுவரை 1000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படவில்லை. 

புத்தம் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரவுள்ளதாகச் சமீபகாலமாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. 

1000rs

கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்கும் விதமாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்வதாக கூறி, பிரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பர் 8-ம் தேதி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதன் பிறகு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால்  இதுவரை 1000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்படவில்லை. 

1000rs

புதிய 1000 ரூபாய்  நோட்டுகளை  ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற பக்கங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . ஆனால் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி  மறுத்துள்ளது. 

வலைதளங்களில்  பரவும்  இந்த செய்தி போலியானவை என்றும் இந்த ரூபாய் நோட்டில் ஆளுநர் கையெழுத்திடும் இடத்தில் மகாத்மா காந்தியின் கையெழுத்து உள்ளது. அதேபோல் இது கற்பனையானது என்று அந்த நோட்டில் குறிப்பிட்டுள்ளார்.

1000rs

இதை பொதுமக்கள் யாருக்கும் பகிர வேண்டாம். ஒருவேளை இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டால் போலி ரூபாய் நோட்டுகள் உருவாக வழிவகுக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.