புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் விரைவில் அறிமுகம் – ரியல்மி சர்ப்ரைஸ் அறிவிப்பு

 

புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் விரைவில் அறிமுகம் – ரியல்மி சர்ப்ரைஸ் அறிவிப்பு

கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யவிருப்பதாக ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லி: கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யவிருப்பதாக ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது.

ரியல்மி நிறுவனம் கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார். மேலும் முன்னதாக இதே விஷயத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சிஸ் வாங் அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவினை ஜி.எஸ்.எம்.ஏ. ரத்து செய்தது.

ttn

இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் ஆன்லைனில் விழாவை நடத்துகிறது. எதிர்வரும் மாதங்களில் ரியல்மி நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மாதவ் சேத் தெரிவித்திருக்கிறார். அப்போது ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களும் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் கூறினார்.