புதிய வடிவில் களமிறங்கும் சாண்ட்ரோ: கொடுக்கும் விலைக்கு வொர்த்தா?

 

புதிய வடிவில் களமிறங்கும் சாண்ட்ரோ: கொடுக்கும் விலைக்கு வொர்த்தா?

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட்டை உயர்த்திய சாண்ட்ரோ கார் மீண்டும் புதிய வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மார்க்கெட்டை உயர்த்திய சாண்ட்ரோ கார் மீண்டும் புதிய வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மார்கெட்டை உயர்த்தியதில் சாண்ட்ரோ காரின் பங்கு மிக முக்கியமானது.

1997-ல் 3 லட்ச ரூபாய் விலையில் அறிமுகமான அந்த கார்  20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

santro

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த புதிய சாண்ட்ரோவில் என்பதை பார்ப்போம்,

  • செலிரியோ, க்விட், டியாகோ கார்களை ஒப்பிடும்போது சான்ட்ரோதான் இந்த செக்மன்டிலேயே இப்போது விலை அதிகமான கார். ஆனால், விலைக்கு ஏற்ற லுக் இல்லை, ஐ10 காரை போலவே உள்ளது.
  • 6 லட்சத்துக்கும் அதிகமான விலையில் இருக்கும் காரில் குறைந்தபட்சம் 1.2 லிட்டர் இன்ஜின் இருக்கவேண்டும். இன்ஜினை பொறுத்தவரை சான்ட்ரோவில் 65bhp பவர் தரும் 1.1 லிட்டர் எப்ஸிலான் இன்ஜின் உள்ளது. ஆனால், மைலேஜ் அதிகம் தருகிறது.
  • ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் இருக்கும் எல்லா வசதிகளுமே சான்ட்ரோவில் வந்துவிட்டன. 7 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்டிராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, ரியர் ஏசி வென்ட் போன்றவை இந்த செக்மன்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • வசதிகளில் ஸ்கோர் செய்திருந்தாலும் பாதுகாப்பில் அடிவாங்கிவிடுகிறது சான்ட்ரோ. டாப் வேரியன்ட்டில் மட்டுமே இரண்டு காற்றுப்பைகள். 5.86 லட்சத்துக்கு விற்கப்படும் ஸ்போர்ட்ஸ் வேரியன்ட்டில் 2 ஏர்பேக் இல்லை.

sharukh khan

மொத்தத்தில், வாங்கலாமா? வேண்டாமா? என கேள்வி கேட்டால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் டியாகோவுக்கு அடுத்தபடியாக அதிக மதிப்பைத் தரும் காராக சான்ட்ரோ உள்ளது. ஆனால், பெரிய இன்ஜின், அலாய் வீல், பெரிய டயர்கள், டூயல் ஏர்பேக், பவர் சீட் அட்ஜஸ்ட்மன்ட், ஸ்டாண்டர்டு ரியர் பார்க்கிங் சென்ஸார் போன்றவை இல்லாதது குறை தான்.