புதிய மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ சாதனத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது

 

புதிய மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் கோ சாதனத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ சாதனத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

டெல்லி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ சாதனத்தின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சர்பேஸ் கோ சாதனத்திற்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4 சாதனங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இதன் ரூ.38,599 முதல் தொடங்குகிறது.

8.3 எம்.எம். அளவில் 0.52 கிலோ எடை கொண்டிருக்கும் சர்பேஸ் கோ சாதனத்தில் 10-இன்ச் டிஸ்ப்ளே மாடல் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. சர்பேஸ் கோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.38,599 என்றும் 8 ஜி.பி. ரேம்ஸ 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்பேஸ் கோ டைப் கவர் (பிளாக்) விலை ரூ.8,699 என்றும் சிக்னேச்சர் டைப் கவர் விலை ரூ.11,799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2-இன்-1 சாதனம் சர்பேஸ் பென் உடன் வழங்கப்படுகிறது.

புதிய சர்பேஸ் பென் 4,096 லெவல் பிரெஷர் சென்சிடிவிட்டி மற்றும் 3:2 ரெசல்யூஷன் கொண்ட பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 7த் ஜெனரேஷன் இன்டெல் பென்டியம் கோல்டு பிராசஸர் 4415Y கொண்டு இயங்கும் சர்பேஸ் கோ டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகிறது.

புதிய சர்பேஸ் கோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் 9 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சர்பேஸ் கனெக்ட் வசதி சாதனத்தை சார்ஜ் மற்றும் டாக் செய்ய வழங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. டைப்-சி 3.1, ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ கால் மேற்கொள்வோருக்கு சர்பேஸ் கோ 5 எம்.பி. ஹெச்.டி. கேமராவும், ஆட்டோ-ஃபோகஸ் வசதி கொண்ட 8 எம்.பி. ஹெச்.டி. கேமரா மற்றும் டூயல் மைக்ரோபோன்களை கொண்டிருக்கிறது.