புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

 

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

டெல்லி: புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை, மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுனில் அரோரா, டிசம்பர் மாதம் 2-ம் தேதி பதவியேற்கவுள்ளார். 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநில ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரியான சுனில் அரோரா 1980-ஆம் ஆண்டு பணியில் இணைந்தார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்ராவின் முந்தைய ஆட்சியின் போது, அவரது செயலாளராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இவர் நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.