புதிய தமிழகம் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டி: கிருஷ்ணசாமி அறிவிப்பு!

 

புதிய தமிழகம் கட்சி  இரட்டை இலை  சின்னத்தில் போட்டி: கிருஷ்ணசாமி அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. 

மக்களவை தேர்தல்

ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. 

அதிமுக கூட்டணி

admk

தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள், என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம்,  புதிய நீதிக்கட்சி  மற்றும்  தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு  தலா ஒரு இடம் என்று ஒதுக்கப்பட்டுள்ளன.

 

புதிய தமிழகம் கட்சிக்குத் தென்காசி தொகுதி

krishnasamy

இதை தொடர்ந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்குத் தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்த அவர், செயல்வீரர்கள் கூட்டத்திற்குப் பின் முக்கியமான சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். 

இரட்டை இலை சின்னத்தில் போட்டி

admk

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியானது கூட்டணிக் கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக எங்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கவில்லை என்றால் அதிமுக அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டல் விடும் தொனியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இதையும் வாசிக்க: தேர்தலுக்கு வாங்கப்பட்ட மை பாட்டில்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?