புதிய ஆலைகள் வந்தால் தான் பொருளாதாரம் பெருகும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

 

புதிய ஆலைகள் வந்தால் தான் பொருளாதாரம் பெருகும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

நாளுக்கு நாள் புதிய தொழிற்சாலைகள் வந்தால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் பெருகும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

சென்னை: நாளுக்கு நாள் புதிய தொழிற்சாலைகள் வந்தால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் பெருகும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

காரைக்குடியில் செயல்படும் தனியார் நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதாரச்சீர்கேடு அடைவதாகவும், அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, அந்த நூற்பாலையை அவ்வப்போது அமைச்சர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், பிரச்சனைகளை கூறினால் அதை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும், ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கேற்ற ஆலோசனைகளை கூறலாம் என தெரிவித்த அவர், நாளுக்கு நாள் புதிய ஆலைகள் தமிழகத்திற்கு வந்தால் தான், பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் பெருகும் என்றும் தெரிவித்துள்ளார்.