புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகிறது

 

புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகிறது

புதிய அம்சங்களுடன் கூடிய அடுத்த வாட்ஸ்அப் அப்டேட் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: புதிய அம்சங்களுடன் கூடிய அடுத்த வாட்ஸ்அப் அப்டேட் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மெசேஜிங் ஆப்களில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்அப் ஆகும். இந்தியாவில் மட்டும் இந்த செயலியை சுமார் 20 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது இதன் அப்டேட் வெளியிடப்படும். அந்த வகையில் முக்கியமான புதிய அம்சங்களுடன் கூடிய அடுத்த வாட்ஸ்அப் அப்டேட் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது அடுத்த அப்டேட்டில் டார்க் மோடு (Dark Mode), ஸ்வைப் டூ ரிப்ளை (Swipe To Reply) ஆகிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டார்க் மோடு வசதியில் வாட்ஸ்அப் செயலியின் நிறம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அதாவது இருட்டின் பின்னணியில் தெளிவான எழுத்துக்களை கொண்டிருக்கும் வகையில் படிப்பவர்களுக்கு புதியதோர் அனுபவத்தை வழங்கும். டிவிட்டரில் இந்தச் சேவை முன்பே அறிமுகமாகி விட்டது. இந்த வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களின் பயன்பாட்டுக்கு வருகிறது.

மற்றொரு வசதியான ஸ்வைப் டூ ரிப்ளை ஆப்ஷன் முன்பே ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிமுகமாகி விட்டது. தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வசதியின் மூலம் வாட்ஸ் அப்பில் ரிப்ளை செய்யும் முறை எளிமை ஆக்கப்பட்டுள்ளது.