புதியதாக 3 மாவட்டமா.. 40 ஆக உயருகிறதா மாவட்டங்களின் எண்ணிக்கை?!

 

புதியதாக 3 மாவட்டமா..  40 ஆக உயருகிறதா மாவட்டங்களின் எண்ணிக்கை?!

தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்கள் கடந்த ஆண்டு 37 மாவட்டமாக உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்கள் கடந்த ஆண்டு 37 மாவட்டமாக உயர்த்தப்பட்டது. வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என்று 2 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்று 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன் படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அனைத்து மாவட்டங்களையும் நேரில் சென்று திறந்து வைத்தார்.  

ttn

இந்நிலையில், புதியதாக மேலும் மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியைத் தனி மாவட்டமாக உருவாக்கப் போவதாகவும்,  கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சியையும்  மற்றும் தஞ்சை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையையும்  தனி மாவட்டமாகப் பிரிக்கப் போவதாகவும் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலின் படி, புதியதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக உயரும்.