புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம்: நீதிமன்றம் கருத்து

 

புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம்: நீதிமன்றம் கருத்து

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுவரையறை முடியும் முன்னரே உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்பாணையை வெளியிட்டதால், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக மனுத் தாக்கல் செய்தது.

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுவரையறை முடியும் முன்னரே உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்பாணையை வெளியிட்டதால், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யக்கோரி திமுக மனுத் தாக்கல் செய்தது. அந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய மாவட்டங்களின் வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என்று கேள்வி எழுப்பியது. அதனைத் தொடர்ந்து, 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை நடத்தி ஒத்தி வைக்க முடியுமா என்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்கும் படி உத்தரவிட்டது. ஆனால், திமுக சார்பில் தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே வாதங்கள் நடைபெற்றன. 

ttn

அதன் பின்னர், தமிழக தேர்தல் ஆணையம் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலைத் தள்ளி வைக்கத் தயார் என்றும் மீதமுள்ள இடங்களில் தேர்தல் நடத்தலாம் என்றும் மனு அளித்தது. அதன் படி, 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை முடியும் வரை தேர்தலை ஒத்தி வைக்குமாறும், பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துமாறும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.