புதிதாக உருவாகவுள்ள ஆம்பன் புயல்: தமிழகத்தை பாதிக்குமா?

 

புதிதாக உருவாகவுள்ள ஆம்பன் புயல்: தமிழகத்தை பாதிக்குமா?

20-ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ff

இதுகுறித்து கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அது  இன்று மாலை புயலாக உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து பின்னர்  வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும்.  இதையடுத்து வரும் 20-ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. 

rr

இதன் காரணமாக தமிழகத்தை பொருத்தவரை மழை இருக்காது என்றும், புயல் விலகி செல்வதால் வரும் நாட்களில் தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம்  வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.