புதிதாக உதயமான மாவட்டங்களை நேரில் சென்று திறந்து வைக்கிறார் முதல்வர் !

 

புதிதாக உதயமான மாவட்டங்களை நேரில் சென்று திறந்து வைக்கிறார் முதல்வர் !

புதிதாக உருவான இந்த 5 மாவட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்கவுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், வேலூர் மாவட்டத்திலிருந்து இன்னும் 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் நெல்லை மாவட்டம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். 

EPS

அதன் படி, வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என்று 2 மாவட்டங்களாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்று 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. 

EPS

புதிதாக உருவான இந்த 5 மாவட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்கவுள்ளார். அதற்கான நாள் மற்றும் நேரம் இறுதி செய்யப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தை வரும் 22 ஆம் தேதி காலை 9.15 மணிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வரும் 27 ஆம் தேதி காலை 10.15 மணிக்கும் திறந்து வைக்கிறார். அதன் மறு நாள், அதாவது 28 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தையும், நண்பகல் 12:30 மணிக்குத் திருப்பத்தூர் மாவட்டத்தையும், 29 ஆம் தேதி நண்பகல் 12:45 மணிக்குச் செங்கல்பட்டு மாவட்டத்தையும் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.