புடவை சரியில்லை… திருமணத்தை நிறுத்திய மணமகனின் பெற்றோர்!

 

புடவை சரியில்லை… திருமணத்தை நிறுத்திய மணமகனின் பெற்றோர்!

கர்நாடகாவில் மணமகளின் சேலை சரியில்லை என்று காரணம் கூறி திருமணத்தை நிறுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் மணமகளின் சேலை சரியில்லை என்று காரணம் கூறி திருமணத்தை நிறுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

saree

கர்நாடக மாநிலம் ஹாசனைச் சேர்ந்தவர் ரகு குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கீதாவை கடந்த ஓராண்டாக காதலித்துவந்தார். இவர்கள் காதலுக்கு ரகு குமார் வீட்டில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், திருமணத்துக்கு சம்மதித்தனர். இதன் படி இருவீட்டாரும் இணைந்து திருமணத்தை முடிவு செய்தனர். கடந்த வியாழன் (6ம் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. புதன் கிழமை மாலை திருமண சடங்கில் பங்கேற்ற மணமகள் சங்கீதாவின் புடவை சரியாக இல்லை, தரம் குறைந்த புடவை போல உள்ளது என்று ரகுவின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும், புடவையை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது திடீரென்று எப்படி மாற்றுவது என்று நினைத்த மணமகளின் பெற்றோர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

wedding

அடுத்த நாள் காலை திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தது. மணமகள் சங்கீதா திருமணத்துக்கு தயாராகி வந்தார். அப்போததான் மண மகன் வீட்டார் அங்கு இல்லாதது தெரியவந்தது. அவர்களைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதனால், திருமணம் நின்றது. ரகு குமாரின் குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் இது குறித்து சங்கீதாவின் பெற்றோர் ஹாசன் போலீசில் புகார் செய்தனர். மணமகன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.