‘புக் மை ஷோ ‘ ரேட்டிங்ஸ் எல்லாமே பொய்… பிரபல தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு!

 

‘புக் மை ஷோ ‘  ரேட்டிங்ஸ் எல்லாமே  பொய்… பிரபல தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு!

 ரசிகர்களும் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு படம் பார்க்கலாமா? வேண்டாமா என்று முடிவெடுக்கின்றனர்.

ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் தியேட்டர்களில் பார்த்துவிட்டு வந்து மற்றவர்களுக்கு அது குறித்து கூறுவது வழக்கம். அதனால் தான்  படம் எப்படியிருக்கு என்று யூடியூபில் விமர்சனங்கள், ரேட்டிங் ஆகியவற்றை  வெளியிட்டு  ட்ரெண்டாகின்றனர்.  ரசிகர்களும் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு படம் பார்க்கலாமா? வேண்டாமா என்று முடிவெடுக்கின்றனர்.

vinod

அந்த அளவுக்கு இணையத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. ஆனால்  இது உண்மையில் சரியான ரேட்டிங்கா? என்றால் அது கேள்வி குறிதான்… சம்மந்தப்பட்டவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு படத்தை ஆஹா..ஹோ என்று பாராட்டும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அந்த வகையில் நிவின் பாலி  நடிப்பில்  வெளியான மூத்தோன் படத்தின்   தயாரிப்பாளர் வினோத் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘புக் மை  ஷோ பெரிய மோசடி செய்து வருகிறது.  தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு டிக்கெட்டின் விலையிலிருந்து  ரூ. 30 பெற்றாலும் கூடுதலாக பணத்தை கொள்ளையடித்து வருகிறது.  தயாரிப்பாளர்கள் படத்தின் புரொமோஷனுக்காக  லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 சமீபத்தில் புக் மை  ஷோ எனது படத்தின் ரேட்டிங்கை 19% சதவீதம் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அதன்பிறகு  நான் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க சம்மதம் சொன்ன பிறகு சில மணிநேரங்களில் என் படத்தின் மதிப்பீடு 76% ஆக அதிகரித்தது.  புக் மை  ஷோவில் கொடுக்கப்படும் ரேட்டிங் உண்மையில்லை.  

தயாரிப்பாளர்கள் இதை புறக்கணிக்க வேண்டும். தயாரிப்பாளர் தனஞ்செயன் மாதிரி தொழில் மூத்தவர்கள் இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.