“புக் படிக்க போனால் , பெண்ணை புக் செய்து வரலாம்”-பாலியல் தொழில் நடக்கும்  பழமையான லைப்ரரி..

 

“புக் படிக்க போனால் , பெண்ணை புக் செய்து வரலாம்”-பாலியல் தொழில் நடக்கும்  பழமையான லைப்ரரி..

ஜமைக்காவில் மான்டெகோ விரிகுடாவில் உள்ள பழமையான செயின்ட் ஜேம்ஸ் பாரிஷ் நூலகத்தை   பாலியல் தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் , ஊழியர்கள் நேற்று தங்கள் அதிருப்தியை வெளியிட  நூலகத்தை மூடி அங்கு  எதிர்ப்புப் பலகைகளை வைத்தனர் .மூத்த நூலகர் மரிலி மூடி, பலமுறை புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால்  தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறினார்.

ஜமைக்காவில் மான்டெகோ விரிகுடாவில் உள்ள பழமையான செயின்ட் ஜேம்ஸ் பாரிஷ் நூலகத்தை   பாலியல் தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படுவதால்,ஊழியர்கள் நேற்று தங்கள் அதிருப்தியை வெளியிட  நூலகத்தை மூடி அங்கு  எதிர்ப்புப் பலகைகளை வைத்தனர் .

st.joseph

மூத்த நூலகர் மரிலி மூடி, பலமுறை புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால்  தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறினார்.
நேற்று நூலகம் வந்த  நூலக பயனர்களை , ‘உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான மன உளைச்சல்’, ‘மனிதாபிமானமற்ற நிலைமைகள்’ மற்றும் ‘மோசமான பாதுகாப்பு அமைப்பு’ – போன்ற பலகைகளுடன் தொழிலாளர்கள் வரவேற்றனர்.பிறகு மதியம் 1:30 மணிக்கு நூலகம் செயல்பாட்டை நிறுத்தியது. 68 ஆண்டு பழமையான கட்டிடத்தை பாலியல் தொழில்  சந்திப்பு இடமாகப் பயன்படுத்துவோரால்  ஊழியர்கள் வெறுப்படைகிறார்கள் என்று மூடி கூறினார்.

library

இது பற்றி காவலர்கள் கேள்விகேட்டதால்  “சனிக்கிழமையன்று நூலகத்தின் குப்பையில் திடீரென தீ பிடித்து  எரிந்தது, இதனால்   பாதுகாப்பு குறித்து காவலர்கள் கவலை அடைந்தார்கள் . மேலும் அவர்களது  கார் டயர்கள் வெட்டப்பட்டன, மேலும் மர்ம நபர்கள் பாதுகாப்புப் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர், ”என்று மூடி  கூறினார்.

closed

மேலும் இங்கு சமூக விரோத சக்திகள் மூலம்   புகை மற்றும் மது குடிப்பது  மற்றும் பாலியல் செயல்களில் ஈடுபடுவது போன்றவை நடைபெறுவதால்   நாங்கள் அதை எதிர்க்க முயற்சித்தோம், இதன் விளைவாக நாங்கள் அவமதிக்கப்படுகிறோம், ”என்று மூடி கூறினார்.