புகையிலை ஒழிப்பு தினம்: தம் அடிச்சா தப்பா சார்!

 

புகையிலை ஒழிப்பு தினம்: தம் அடிச்சா தப்பா சார்!

புகை நமக்கு மட்டும் பகை அல்ல நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தான் என்ற வசனத்தை நியாகப்படுத்தும் புகையிலை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

புகை நமக்கு மட்டும் பகை அல்ல நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தான் என்ற வசனத்தை நியாகப்படுத்தும் புகையிலை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

உலக அளவில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து Global Adult Tobacco Survey எனப்‌படும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் குறித்த ஆய்வை மேற்கொண்டது. . நாடு முழுவதும் 2009 முதல் ஆண்டுதோறும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 

cigarette

இதன்படி, தமிழகத்ததில், 2016 அக்டோபர், நவம்பரில் 1371 ஆண்கள் மற்றும் 1544 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், தமிழகத்தில்,  2009 – 10 ஆம் ஆண்டு புகையிலை பயன்படுத்துவோர் 16 புள்ளி 6 சதவிகிதமாக இருந்தது. இந்த விகிதம் அதிகரித்து 2016-17 கணக்கெடுப்பின்படி, 20 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது கடந்த 8 ஆண்டுகளில் புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் விகிதம் 3 புள்ளி 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.. இதேபோல, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கை 2009-10 ல் 9 புள்ளி 6 சதவிகிதமாகவும், 2016-17 ல் 10 புள்ளி 5 சதவிகிதமாக உள்ளது. இதேபோல, புகையற்ற புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை பொருத்தவரை 2009-10ல் 8 புள்ளி 1 சதவிகிதமாகவும், 2016-17 ல் 10 புள்ளி 6 சதவிகிதமாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

smoke

புகைப்பவர்கள் விடும் புகையால் பாதிக்கப்படுவோரை பொருத்தவரை அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் மற்றவர்கள் பாதிப்புக்குள்ளாவது அலுவலகம் போன்ற பணிபுரியும் இடங்களில் அதிகம் இருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை. அடுத்து வீட்டில் 11 சதவிகிதம் பேரும், பொதுப்போக்குவரத்தில் 5 புள்ளி 8 சதவிகிதம் பேரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். திரையரங்குகளில் 4 புள்ளி 4 சதவிகிதமும், விடுதிகளில் 3 புள்ளி 3 சதவிகிதம் பேரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

cigarette

சிகரெட்டுக்கு பதிலாக ஈ சிகரெட் என்றழைக்கப்படும் ஸ்மார்ட் சிகரெட் தற்போது இளைஞர் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மாற்று சிகரெட்டும் புகைத்தலுக்கு இணையான தீமையை தரும் என்பதால் அதனையும் தடை செய்ய வேண்டும் என  நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கைவிடுகின்றனர். CHAIN SMOKER எனப்படும் தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர், புகைபிடிப்பதற்காக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவிடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பதால் ஏற்படும் கேடுகள் குறித்து எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல், புகைப் பிடிப்பவர்கள் தாமாக முன்வந்து இப்பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.