புகைப்பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை ராதிகா

 

புகைப்பிடித்து  சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை ராதிகா

இதனால் அனைத்து தளங்களிலிருந்தும் இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும் என்றும் வரும் ஏழு நாட்களுக்குள் இதுகுறித்து ராதிகா விளக்கம் அளிக்கவேண்டும்

இயக்குநர்  சரண்  இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தில் பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ்  ஹீரோவாக அறிமுகமாகிறார்.  இப்படத்தில் ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், நிகிஷா படேல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சைமன் கிங் இசையமைத்துள்ள  சுரபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

TTN

இந்தப் படம் வரும் 29-ம் தேதி ரிலீஸாக வுள்ள  நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்ககம்  நடிகை ராதிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது இப்படத்தில் ராதிகா வடசென்னை பெண் தாதாவாக நடித்துள்ளார். இதனால் அவர் புகைபிடிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது.

TTN

ஆனால் மக்கள் நல்வாழ்வு துறை வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக புகைபிடிக்கும் காட்சிகள் அமைந்துள்ளதாகவும், அந்த காட்சிகளின் ;போது  எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இதனால் அனைத்து தளங்களிலிருந்தும் இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும் என்றும் வரும் ஏழு நாட்களுக்குள் இதுகுறித்து ராதிகா விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது. ஒருவேளை அதுதவறும் பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.