புகுந்த வீட்டில் எப்படி நடந்துக் கொள்ளா வேண்டும்?: மாணவிகளுக்கு பாடம் நடத்தும் கல்லூரி!

 

புகுந்த வீட்டில் எப்படி நடந்துக் கொள்ளா வேண்டும்?: மாணவிகளுக்கு பாடம் நடத்தும் கல்லூரி!

பிரபல கல்லூரி ஒன்றில் நல்ல மருமகளாக நடந்துக் கொள்வது எப்படி? என்பது பற்றிய பிரத்யேக பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாரணாசி: பிரபல கல்லூரி ஒன்றில் நல்ல மருமகளாக நடந்துக் கொள்வது எப்படி? என்பது பற்றிய பிரத்யேக பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில், திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்காக பிரத்யேக பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. புகுந்த வீட்டு குடும்ப சூழ்நிலையை உணர்ந்து எப்படி நல்ல மருமகளாக நடந்துக் கொள்ள வேண்டும். அங்குள்ள உறவுகளை எப்படி அனுசரித்து நடக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் விதமாக ‘மருமகள்’ என்னும் புதிய பயிற்சியை கல்லூரி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Daughter in law

கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்களது பாடப்பிரிவுடன் சேர்த்து இந்த 3 மாத பயிற்சியை மேற்கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போதைய சமூகத்தில் பெண்கள் தங்களது கடமையை உணர்ந்து, குடும்ப வாழ்க்கையை சிறப்பானதாக்க இந்த பயிற்சி வகுப்பு உதவும் என கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பு குறித்து மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.