புகார்களை கண்டுகொள்ளாத டெல்லி போலீஸ்! – வெளியானது அதிர்ச்சி ஆதாரம்

புகார்களை கண்டுகொள்ளாத டெல்லி போலீஸ்! – வெளியானது அதிர்ச்சி ஆதாரம்

டெல்லியில் கலவரம் தீவிரமாக நடக்க போலீஸ் தன்னுடைய கடமையைச் சரிவர செய்யாததே காரணம் என்று கூறப்படுகிறது. வன்முறை பேச்சுக்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தவறியது, வன்முறையாளர்களை கைது செய்யத் தவறியது, வன்முறையாளர்களுக்கு உதவியது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் டெல்லி போலீஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போது கலவரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது ஆதாரத்துடன் வெளிப்பட்டுள்ளது.

டெல்லியில் கலவரம் நடந்த நாட்களில் போலீசார் புகார்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை என்.டி.டி.வி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கலவரம் தீவிரமாக நடக்க போலீஸ் தன்னுடைய கடமையைச் சரிவர செய்யாததே காரணம் என்று கூறப்படுகிறது. வன்முறை பேச்சுக்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தவறியது, வன்முறையாளர்களை கைது செய்யத் தவறியது, வன்முறையாளர்களுக்கு உதவியது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் டெல்லி போலீஸ் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போது கலவரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது ஆதாரத்துடன் வெளிப்பட்டுள்ளது.

delhi-riot-052

என்.டி.டி.வி செய்தி ஊடகம் இது தொடர்பாக டெல்லியில் கலவரம் நடந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டது. பஜன்புரா காவல் நிலையத்துக்கு பிப்ரவரி 24 முதல் 26 வரை 3500க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக என்.டி.டி.வி பத்திரிகையாளர்கள் அந்த போலீஸ் நிலையத்தின் பதிவேட்டை ஆய்வு செய்தனர். பதிவேட்டில் யார், எங்கிருந்து, எப்போது, என்ன புகார் அளித்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற இடத்தில் எதுவும் நிரப்பப்படவில்லை. பலரும் தங்கள் பகுதியில் கலவரம் நடக்கிறது, துப்பாக்கிச்சூடு நடக்கிறது, தீவைத்துக் கொளுத்துகிறார்கள் என்று எல்லாம் புகார் செய்துள்ளனர். 

டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கலவரம் தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை (23ம் தேதி) 700 அழைப்புகள் வந்துள்ளன. 24ம் தேதி 3500 அழைப்புகளும், 25ம் தேதி அதிகபட்சமாக 7500 அழைப்புகளும் வந்துள்ளது. 26ம் தேதி அது 1500 ஆக குறைந்துவிட்டது. வன்முறை தீவிரமாக இருந்த நாட்களை இதன் மூலம் காண முடிகிறது.

delhi-police-890

போலீஸ் நடவடிக்கை இன்மை பற்றி பா.ஜ.க கவுன்சிலர் பிரமோத் குப்தா கூறுகையில், “தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு போன் செய்துகொண்டே இருந்தேன். ஆனால் என்னுடைய அழைப்பை அவர்கள் எடுக்கவே இல்லை. போலீசாரால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நிச்சயம் நடந்திருக்காது” என்றார்.

சிவ்விஹார் பகுதியில் பள்ளி ஒன்றை நடத்திவரும் பைசல் ஃபாருக் கூறுகையில், “என்னுடைய பள்ளியை 60 மணி நேரத்துக்கும் மேலாக கலவரக்காரர்கள் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இது பற்றி போலீசாருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்துக்கொண்டே இருந்தேன். இதோ வருகிறோம் என்று கூறிக்கொண்டே இருந்தார்களே தவிர யாரும் அங்கு வரவில்லை. 

என்.டி.டி.வி நிருபர்கள் இது தொடர்பாக அந்த பகுதி போலீஸ் நிலையத்தின் பதிவேட்டை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த திங்கட்கிழமை (24ம் தேதி) பிற்பகல் 3.45க்கு இரண்டு முறை புகார் வந்துள்ளது. பள்ளி தாக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். ஆனால்  எந்த நடவடிக்கையும் அதன் பேரில் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

டெல்லி போலீசார் கலவரத்தை அடக்க முடியாவிட்டால், துணை ராணுவத்தின் உதவியை கேட்டிருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யாமல், தகவலை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் அமைதி காத்தது ஏன் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.