புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு சூப்பர் ஸ்டார் திரைப்படம் பரிந்துரை: என்ன படம் தெரியுமா?

 

புகழ்பெற்ற கோல்டன் ரீல் விருதுக்கு சூப்பர் ஸ்டார் திரைப்படம் பரிந்துரை: என்ன படம் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 2.0 திரைப்படம்  கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 2.0 திரைப்படம்  கோல்டன் ரீல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியான  ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  

RAJINI

இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையாக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் 713 கோடி ரூபாய்  வசூலித்து  சாதனை புரிந்துள்ளது 

2.0

இந்நிலையில் இசை, ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட 23 பிரிவுகளில் கோல்டன் ரீல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் ஒலித் தொகுப்பு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கும், சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் 2.0 படம் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் அமைப்பின் இறுதி பரிந்துரை பட்டியலில் இந்தப் படத்திற்கு இடம் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.