புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் நடைதிறப்பு… பிரதமர் நரேந்திர மோடி சார்பாக முதல் பூஜைகள் நடந்தது…

 

புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் நடைதிறப்பு… பிரதமர் நரேந்திர மோடி சார்பாக முதல் பூஜைகள் நடந்தது…

உத்தரகாண்டில் 6 மாத குளிர்கால இடைவெளிக்கு பிறகு புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி சார்பாக கோயிலில் முதல் பூஜைகள் நடந்தன.

நம் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற 12 ஜோதிலிங்க சிவ தலங்களில் ஒன்று கேதார்நாத் கோயில். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலையின் மேல் மந்தாகின நதியின் கரையில் இந்த கேதார்நாத் சிவன் கோயில் அமைந்துள்ளது. கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து 14 கி.மீட்டர் தொலைவு மலை ஏறியே இந்த கோயிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய முடியும். கேதார்நாத் கோயில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அட்சயதிருதியை முதல் தீபாவளி திருநாள் வரை திறந்திருக்கும். பின் குளிர்காலம் காரணமாக 6 மாதம் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

பிரதமர் மோடி

தற்போது 6 மாத குளிர்கால இடைவெளிக்கு பிறகு நேற்று கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. நேற்று காலை 6.10 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த ஆண்டு ஊரடங்கு மத்தியில் கேதார்நாத் கோயில் இன்று திறக்கப்பட்டது. 10 குவிண்டால் மலர்களால் கோயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி சார்பாக கோயிலில் முதல் பூஜைகள் நடத்தப்பட்டன.

கேதார்நாத் கோயில்

கேதார்நாத் கோயில் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்குக்கு மத்தியில் சிவபெருமான் கோயில் திட்டமிட்டப்படி திறக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கோயிலுக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி சார்பாக கோயிலில் முதல் பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர் என தெரிவித்தனர்.