புகழேந்தியை ஓரங்கட்டிய தினகரன் : கட்சி தாவலுக்கு தயார் என தகவல்!

 

புகழேந்தியை ஓரங்கட்டிய தினகரன் : கட்சி தாவலுக்கு தயார் என தகவல்!

அமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர்  இடம்பெறவில்லை.

அமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர்  இடம்பெறவில்லை.

கோவையில்  அமமுக நிர்வாகியான  புகழேந்தி தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளுடன், ‘போகும் அல்லது இருக்கும் இடத்தில் முகாந்திரம் இருக்க வேண்டும். இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என்று பேசும் படியாக அந்த வீடியோ இருந்தது.  இதனால் புகழேந்தி அமமுகவிலிருந்து விலக இருப்பதாகத் தகவல் வெளியானது. இதை புகழேந்தி மறுத்தார். 

pugazhenthi

இதையடுத்து  புகழேந்தி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், புகழேந்தி பேசியதை யாரும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

 

இந்நிலையில் அமமுக செய்தித் தொடர்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ வெற்றி வேல், முன்னாள் அமைச்சர் வெற்றிவேல் மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பெயர்கள்  இடம்பெற்றுள்ளது. 

ஆனால் அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலம் புகழேந்தி விரைவில் கட்சியிலிருந்து வெளியேறலாம்  என்று கூறப்படுகிறது.