பீலா ராஜேஷ் தினமும் பேட்டிக்கொடுக்கும் டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா 

பீலா ராஜேஷ் தினமும் பேட்டிக்கொடுக்கும் டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டி.எம்.எஸ் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலக வளாகத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட, 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. இந்த வளாகத்தில்தான் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் மாலை செய்தியாளர்களை சந்திப்பார். இதனால் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் இங்கு கூடி இருப்பது வழக்கம். 

பீலா ராஜேஷ்

இந்த நிலையில், ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.