பீப்பி ஊதி வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி – ஆசி பெற்ற விராட் கோலி

 

பீப்பி ஊதி  வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி – ஆசி பெற்ற விராட் கோலி

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில்  கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டியிடம் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆசீர்வாதம் பெற்றனர்

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில்  கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டியிடம் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆசீர்வாதம் பெற்றனர்

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நேற்று நடந்தது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில்,  முதலில் ஆடிய  இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி  286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

virat

இந்நிலையில் இந்த போட்டியைக்  காண சாருலதா என்ற  87 வயது மூதாட்டி ஒருவர் வருகை புரிந்திருந்தார். அவர்   இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும் தேசியக்கொடி பதிந்திருக்கும் சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும் பீப்பி ஊதி  வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதுகுறித்து பேசிய அவர், ‘நான் கிரிக்கெட் ரசிகை. இந்தியா கண்டிப்பாக உலகக்கோப்பையை வெல்லும். இந்தியா வெற்றி பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வென்றபோது நான் அங்கிருந்தேன்’  என்றார். 

 

மூதாட்டி குறித்து கேள்விப்பட்ட கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும்  போட்டி முடிந்த பிறகு அவரை சந்தித்து ஆசி வாங்கினர்.

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விராட், நாட்டுப்பற்றுக்கு வயது தடையில்லை என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது