பீச்சில் கடுமையாக ஸ்டண்ட் பயிற்சி எடுக்கும் தன்ஷிகா: வைரல் வீடியோ!

 

பீச்சில் கடுமையாக ஸ்டண்ட் பயிற்சி எடுக்கும் தன்ஷிகா: வைரல் வீடியோ!

நடிகை தன்ஷிகா பீச் மணலில் கடுமையாக ஸ்டண்ட் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: நடிகை தன்ஷிகா பீச் மணலில் கடுமையாக ஸ்டண்ட் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

நடிகைகள் பலர் ஹீரோவுடன் டூயட் மட்டும் பாடிக்கொண்டு நடித்து வரும் சூழலில் சில கதாநாயகிகள் ரிஸ்கான காட்சிகளையும் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி ஒரு சில நடிகைகள் ரிஸ்க் எடுத்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஸ்டண்ட் கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ கூட சமீபத்தில் வெளியானது. 

dhanshika

அந்த பட்டியலில் தற்போது நடிகை தன்ஷிகாவும் இணைந்துள்ளார். ஆம்.. அவர் தற்போது ஸ்டண்ட் பயிற்சி வீடியோ ஒன்றை தனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பீச் மணலில் இரண்டு உதவியாளர்களுடன் தன்ஷிகா கடுமையாக  ஸ்டண்ட் பயிற்சி எடுத்துவருகிறார்.

அந்த வீடியோ மூலம் அவர் எந்த அளவுக்கு ஸ்டண்ட் பயிற்சியில் முழு ஈடுபாட்டுடன் இருக்கின்றார் என்பது தெரிய வருகிறது. ஏற்கனவே சாய்தன்ஷிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ‘கபாலி’ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.