பீகாரில் ஏழைகளுக்கு ரூ.100 கோடியில் நிவாரணம்! – நிதிஷ் குமார் அறிவிப்பு

பீகாரில் ஏழைகளுக்கு ரூ.100 கோடியில் நிவாரணம்! – நிதிஷ் குமார் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்கள், கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ வழியின்றி பெருநகரங்களிலிருந்து மக்கள் நடந்தே வெளியேறத் தொடங்கிவிட்டனர். இவர்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு எந்த ஒரு திட்த்தையும் அறிவிக்கவில்லை.

பீகாரில் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் முடங்கியுள்ளவர்களுக்கு ரூ.100 கோடியில் நிவாரணத்தை நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு தழுவிய ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஏழைகள், நடுத்தர மக்கள், கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ வழியின்றி பெருநகரங்களிலிருந்து மக்கள் நடந்தே வெளியேறத் தொடங்கிவிட்டனர். இவர்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு எந்த ஒரு திட்த்தையும் அறிவிக்கவில்லை.

bihar-poors

இந்த நிலையில் கேரள அரசு ரூ.20,000 கோடியை சிகிச்சை அளிக்கவும், பொருளாதார ரீதியாக உதவவும் ஒதுக்கியது. தமிழக அரசு ரூ.3750 கோடியை தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கியது. 
பீகார் அரசு ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைக்காக நிதி ஒதுக்கியிருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தற்போது ஏழைகள், தொழிலாளர்களுக்கு ரூ.100 கோடியில் திட்டங்களை அறிவித்துள்ளது. இது போதுமானது இல்லை, இன்னும் அதிகமாக ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

bihar-cm

இதற்கிடையே வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, நிதி உதவி, உணவு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மத்திய அரசு இதை செய்தால் மட்டுமே கொரோனா பரவுவதைத் தவிர்க்க முடியும் என்று நிபுணர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.