பீகாரில் என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்! – ஒருமனதாக நிறைவேற்றிய நிதிஷ் குமார்

 

பீகாரில் என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்! – ஒருமனதாக நிறைவேற்றிய நிதிஷ் குமார்

பீகார் சட்டமன்றத்தில் என்.ஆர்.சி-க்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “என்.பி.ஆர், என்.ஆர்.சி விவகாரங்களில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மக்களை ஏமாற்றி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்

பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒரு மனதாக  நிறைவேற்றியுள்ளார் நிதிஷ் குமார்.
பீகார் சட்டமன்றத்தில் என்.ஆர்.சி-க்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “என்.பி.ஆர், என்.ஆர்.சி விவகாரங்களில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மக்களை ஏமாற்றி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.இதற்கு பா.ஜ.க,ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டதால் 15 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

bihar

பின்னர் பேசிய நிதிஷ் குமார்,என்.பி.ஆர்-ல் உள்ள சர்ச்சைக்குரிய கேள்விகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தக் கூடாது,2010ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட முறைபடியே என்.பி.ஆர்-ஐ புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பெருவாரியான ஆதரவுடன் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.