பி.எஸ்.என்.எல்.க்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்த மத்திய அதிரடி மூவ்….

 

பி.எஸ்.என்.எல்.க்கு புத்துயிர்  கொடுக்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்த மத்திய அதிரடி மூவ்….

நஷ்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்த மத்திய அமைச்சர்கள் 7 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக தகவல்.

பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. ஆரம்பத்தில் லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்கள் தற்போது நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. அடுத்த மாத சம்பளமே கொடுக்க முடியாத நிலையில் அந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனையடுத்து பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க போவதாக பேச்சு எழுந்தது.

எம்.டி.என்.எல்.

ஆனால் அந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்கமாட்டோம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் ரூ.69 ஆயிரம் கோடியில் புதிய திட்டத்தை முன்மொழிந்தது. பணியாளர்கள் குறைப்பது, பயன்படுத்தபடாமல் கிடக்கும் அந்த நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பணமாக்குவது, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்டவை அதில் அடங்கும்.

அமித் ஷா

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களின் புத்துயிர் திட்ட நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் அடங்கிய 7 அமைச்சர்கள் கொண்ட உயர் மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக தகவல். இந்த குழு அந்த நிறுவனங்களுக்கு மறுமலர்ச்சி அளிக்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.