பி.எப்.க்கு 8.65 சதவீதம் வட்டியா? செல்லாது…. செல்லாது….. தடை போடும் நிதி அமைச்சகம்!

 

பி.எப்.க்கு 8.65 சதவீதம் வட்டியா? செல்லாது…. செல்லாது….. தடை போடும் நிதி அமைச்சகம்!

2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப்.க்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தொழிலாளர் நல துறை அமைச்சகமும், இ.பி.எப்.ஓ.-ம் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) சுமார் 6 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். 2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் நிர்ணயம் செய்வது தொடர்பாக  கடந்த சில மாதங்களுக்கு முன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் இ.பி.எப்.ஓ.வின் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கடந்த நிதியாண்டுக்கு  வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) 8.65 சதவீதம் வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழுவின் பி.எப். வட்டி குறித்த பரிந்துரை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

இ.பி.எப்.ஓ.

அப்போது தேர்தல் சமயம் என்பதால் அப்போது மத்திய அரசும் அரசு அளித்தது. ஆனால் தற்போது மத்திய நிதி அமைச்சகம் பி.எப்.க்கு 8.65 சதவீதம் வட்டி வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மத்திய தொழிலாளர் துறை அமைச்சகமும், இ.பி.எப்.ஓ.  அமைப்பும் தங்களது முடிவில் உறுதியாக உள்ளன. பி.எப்.க்கு 8.65 சதவீதம் வட்டி தாராளமாக வழங்கலாம். போதுமான கையிருப்பு உள்ளது மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி பி.எப். வட்டிக்கு ஆதரவு அளித்ததையும் அவை சுட்டி காட்டுகின்றன.

நிதி அமைச்சகம்

மத்திய நிதி அமைச்சகத்தின் ஆட்சேபனேக்கு அடுத்த சில நாட்களில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் முறைப்படி பதில் அளிக்கும் என தெரிகிறது. எனவே அதன்பிறகுதான் கடந்த நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் தொடர்பான தெளிவான விடை கிடைக்கும் என தெரிகிறது.