பிஸ்லரி தண்ணீர் பாட்டிலினுள் இருந்த பூச்சி… மக்களே உஷார்..!

 

பிஸ்லரி தண்ணீர் பாட்டிலினுள் இருந்த பூச்சி… மக்களே உஷார்..!

பிரபல குடிநீர் தயாரிக்கும் நிறுவனமான பிஸ்லரி இந்தியா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்து வருகிறது.

பிரபல குடிநீர் தயாரிக்கும் நிறுவனமான பிஸ்லரி இந்தியா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்து வருகிறது. பல மக்கள் இந்த குடிநீரை நம்பி வாங்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர், பிஸ்லரி உள்ளிட்ட  முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் தண்ணீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கிறது என்று வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்ததை எண்ணி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், பிஸ்லரி தண்ணீர் பாட்டில்களில் பூச்சி இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Bisleri

ராமேஸ்வரத்தில், விக்ரம் என்பவர் இன்று மளிகைக் கடையில் ஒரு லிட்டர் பிஸ்லரி தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது சீல் செய்யப்பட்டிருந்த பாட்டிலில் பூச்சி இருந்ததைக் கண்ட விக்ரம் அதிர்ச்சியடைந்து மளிகைக் கடையில் வேறு பாட்டில் தருமாறு கேட்டுள்ளார். அதனையடுத்து, விக்ரம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் பாட்டிலில் பூச்சி இருந்ததை பற்றி தகவல் அளித்துள்ளார். 

Vikram

இதனையடுத்து, ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பாட்டிலில் பூச்சி  பிஸ்லரி நிறுவனத்தில் தயாரிக்கும்  போதே விழுந்துள்ளதா என்றும் அல்லது  பிஸ்லரி பெயரில் வேறு நிறுவனங்கள் விநியோகம் செய்த தண்ணீரா என்ற கோணத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.