பிஸ்தா குல்பி செய்வது எப்படி?

 

பிஸ்தா குல்பி செய்வது எப்படி?

குல்பி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று பிஸ்தா குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்

குல்பி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று பிஸ்தா குல்பியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

பால் – 1 லிட்டர் 
சர்க்கரை – கால் கப் 
பொடித்த பிஸ்தா – 2 ஸ்பூன் 
ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன் 
கார்ன்ஃப்ளோர் – 1 ஸ்பூன் 
பிரெட்- 1 

எப்படி செய்வது ? 

பிரெட் ஓரப்பகுதிகளை வெட்டவும்.அதன் பின்பு நடுப்பகுதி,கார்ன்ஃப்ளோர் மற்றும் பால்1/2 கப் சேர்த்து மிதமாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து மீதம் உள்ள பாலை அடுப்பில் சிறுவக வைத்து கரண்டியால் கலக்கவும். பின்பு பால் சுண்டி வரும் பொது அந்த விழுதை அதில் சேர்த்து கலக்கவும். கடைசியாக சர்க்கரை,ஏலக்காய்த்தூள்,பிஸ்தா கலந்து இறக்கவும். 

pista kulfi

இறக்கியதை நன்கு ஆறவைத்து குல்பி அச்சில் ஊற்றி ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் செட் செய்து துண்டுகள் போட்டு அலங்கரித்து ருசிக்கவும்.