பிஸியான வேலையிலும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை வெளியிட்ட டிடிவி தினகரன் 

 

பிஸியான வேலையிலும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை வெளியிட்ட டிடிவி தினகரன் 

அமீர் நடிப்பில் உருவாகிவரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

சென்னை: அமீர் நடிப்பில் உருவாகிவரும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸரை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் அச்சமில்லை அச்சமில்லை. முத்து கோபால் இயக்கிவரும் இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடித்து வருகிறார். அரசியல் பிரமுகராக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ameer

இந்நிலையில் இப்படத்தின் இரண்டு டீஸர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் மூன்றாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் ‘அச்சமில்லை அச்சமில்லை பட குழிவனருக்கு  வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ட்விட்டர் வாசிகள் கடுமையாக அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். 

 

am