பிள்ளை குட்டி இல்லை; பென்ஷன் 18 ஆயிரம்: வீட்டு வாடகைக்காக பாட்டியை கொலை செய்த பேரன்!

 

பிள்ளை குட்டி இல்லை; பென்ஷன் 18 ஆயிரம்:  வீட்டு வாடகைக்காக பாட்டியை கொலை செய்த பேரன்!

அயனாவரத்தில் வசித்து வருகிறார்.வெல்டிங் பிரிவில் டிப்ளமோ படித்த கோகுல்  கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்

சென்னை ஆவடி அடுத்த கண்ணபாளையத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மல்லிகா. கடந்த 7-ம் தேதி வீட்டில் சடலமாக  கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டி மல்லிகாவின் சகோதரியின் பேரன் 20 வயதான கோகுல் மற்றும் அவரது நண்பர் இருவரும் சிக்கினர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ttn

அதில், மூதாட்டி மல்லிகாவின் சகோதரியின் மகள் பத்மாவதி. இவரது கணவர் இறந்துவிட இவர் சென்னை  அயனாவரத்தில் மகன் கோகுலுடனும்,  9-ம் வகுப்பு படிக்கும் மகளோடும் வசித்து வந்துள்ளார்.  அயனாவரத்தில் வசித்து வருகிறார்.வெல்டிங் பிரிவில் டிப்ளமோ படித்த கோகுல்  கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். இருப்பினும் பப்ஜிக்கு அடிமையான கோகுல்  வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனிடையே அவரது அம்மா நோய்வாய்ப்பட்டுள்ளார். 

ttn

ஒருகட்டத்தில் வீட்டு வாடகை செலுத்தமுடியாமல் போக அதன் உரிமையாளர்  கடந்த 6-ம் தேதி பத்மாவதியின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தார். ஆனால்  அவரை சமாதானம் செய்த அவர் இந்த விஷயத்தை மகன் கோகுலிடம் கூற அவருக்கு மூதாட்டி மல்லிகா நினைவுக்கு வந்துள்ளார். மல்லிகாவுக்கு பிள்ளைகள் இல்லை. அதுமட்டுமின்றி அவரது கணவர் ராணுவத்தில் வேலைசெய்து இறந்துபோனதால் மாதந்தோறும் 18 ஆயிரம் பென்ஷன் தொகை கிடைத்துள்ளது, மேலும் அங்கு சின்னதாக மாரியம்மன் கோயில் வைத்து நிர்வகித்து வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள மூதாட்டி மல்லிகாவிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவரிடம் கேட்கலாம் இல்லையென்றால் கொன்றுவிடலாம் என்று நினைத்து நண்பனுடன் நள்ளிரவு 12 மணிக்கு மல்லிகா வீட்டுக்கு சென்றுள்ளார் கோகுல். 

 

ttn

அப்போது மல்லிகா மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மல்லிகாவிடம் பணம் கேட்கவே அவர் தரமறுத்துள்ளார். இதனால் கோகுல் அவரை  ஆத்திரத்தில் அவரைக் கீழே தள்ளியுள்ளார். இதில் மல்லிகா தலையில் அடிபட்டுப் பலியாகியுள்ளார்.

ttn

பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த 7 சவரன் நகைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார் கோகுல். மறுநாள் அயனாவரத்தில் உள்ள அடகுக் கடை ஒன்றில் நகைகளை அடகு வைத்துள்ளார் . இதை போலீசார் விசாரணையில் கடையின் உரிமையாளர் சொன்னதால் தான் கோகுல் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். 

இதுகுறித்து கூறும் கூகுளின் தாய்,  என் மகன் பப்ஜி விளையாட்டால் தான் இந்த நிலைக்கு வந்துவிட்டான் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.