பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் – தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது

 

பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடும் பாகிஸ்தான் – தேசிய தினத்தில் இந்தியா பங்கேற்காது

பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது

பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த விழாவில் இந்திய பிரதிநிதிகள்  யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் தேசிய தினம்

ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 – ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் அதற்கான முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்த விழாவில் பங்கேற்பதற்காக சீனா தனது போர் விமானங்களை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது.

pakistan national day

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் சீனா இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இதனால் தேசிய தினத்தில் பங்கேற்க வந்த சீன போர் விமானிகளுக்கு  பாகிஸ்தானில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரிவினைவாத தலைவர்களுக்கும் அழைப்பு 

இந்நிலையில், இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த கையோடு  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, புல்வாமா தாக்குதல் விவகாரம் நடந்ததில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் உறவு பதட்டமாக இருக்கும் இந்த நிலையில் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவது போலான இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறது பாகிஸ்தான்.

pakistan national day

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தேசிய தின  நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.