பிள்ளையின் டிசியை கொடுக்காமல் அலையவிட்ட பள்ளி நிர்வாகம்! 

 

பிள்ளையின் டிசியை கொடுக்காமல் அலையவிட்ட பள்ளி நிர்வாகம்! 

நான் கால் பண்ணா கலெக்டரே இங்க வந்து நிப்பாரு பாக்கறியா!!, என்னோட செல்வாக்கு என்னன்னு உனக்கு தெரியுமா உனக்கு!!!, நான் நினைச்சா உன் பொண்ணோட கேரக்டர கெடுத்து எதிர்காலத்தையே மாற்றலாம்…. எனக்கு அரசியல் தலைவர்களின் செல்வாக்கு எல்லாம் இருக்கு, நான் நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம்… இப்படியெல்லாம் பேசுவது ஒரு தனியார் பள்ளி தாளார்…

நான் கால் பண்ணா கலெக்டரே இங்க வந்து நிப்பாரு பாக்கறியா!!, என்னோட செல்வாக்கு என்னன்னு உனக்கு தெரியுமா உனக்கு!!!, நான் நினைச்சா உன் பொண்ணோட கேரக்டர கெடுத்து எதிர்காலத்தையே மாற்றலாம்…. எனக்கு அரசியல் தலைவர்களின் செல்வாக்கு எல்லாம் இருக்கு, நான் நினைச்சா என்ன வேணாலும் செய்யலாம்… இப்படியெல்லாம் பேசுவது ஒரு தனியார் பள்ளி தாளார்… எதிரில் நின்று பெண்ணின் வாழ்க்கைக்காக கெஞ்சிக்கொண்டிருப்பது அப்பள்ளி மாணவியின் தாய்… 

பெற்ற வயிறு பற்றி எரியும் அளவிற்கு அதிகார திமிரில் நடந்துகொள்ளும், தாளார் வேலூர் விருபாட்சிபுரம் பகுதியில் உள்ள தேசிய மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர். எதிரில் கூனி குறுகி நிற்பவர் தனியார் மருத்துவமனையில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தாய்.. இதத்னை போராட்டங்களும் பிள்ளையின் டிசியை வாங்கதான் என்றால் நம்ப முடிகிறதா? உன் குழந்தையின் டிசியை கொடுத்துவிடுகிறோம் அதற்கு பதில் இரண்டு குழந்தைகளை சேர்த்துவிட்டு போ என அதட்டும் தாளாளர்… ஏன் இந்த நிலைமை என்றால் பள்ளி மாணவிக்கு தகப்பன் இல்லை… தகப்பன் இல்லை என்பதற்காக தாயையும், குழந்தையும் அலையவிட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது. இப்படி பாடாய் படுத்திய நிலையில், படிக்காமலேயே இந்த வருட பள்ளிக் கட்டணத்தை செலுத்திவிட்டு பெண்ணும், டிசியும் கிடைத்தால் போதும் என்ற நிம்மதியில் பள்ளியிலிருந்து வெளியே வந்துள்ளார் அந்த ஏழைத்தாய்… கடன்வாங்கி படிக்காத பெண்ணிற்கு பள்ளிக்கட்டணம் கட்டியதை எங்குபோய் சொல்வது… கல்வியும் தொழிலானது இந்த சமூகத்தில்தான் என்பதைதான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.