பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

 

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது கஜமுக சூரசம்ஹார விழா

சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது கஜமுக சூரசம்ஹார விழா.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி என்கின்ற அற்புத திருத்தலம் இங்கு பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர்  குடைவரைக் கோயிலில் அமர்ந்து பக்த்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எங்கும் இல்லாத அம்சமாக இங்கு மட்டும் வலஞ்சுழி தும்பிக்கையுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.ஏறக்குறைய 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக  இக்கோயில் கருதப்படுகிறது .

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 6 ஆம் நாள் திருவிழாவாக ஞாயிற்றுக்கிழமை கஜமுக சூரசம்ஹார விழா நடைபெற்றது.

இதையொட்டி மாலை 4 மணிக்கு கோயில் கிழக்கு கோபுரம் அருகே சண்டிகேஸ்வரருடன் வெள்ளி ரதத்தில் விநாயகர் காட்சியளித்தார். தொடர்ந்து கஜமுக சூரன் விநாயகரைச் சுற்றி மும்முறை வலம் வந்து பின்னர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.

பின்னர் வடக்கு கோபுரம் அருகே சூரனை விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர்.