பிளோரிடாவில் பிடிபட்ட 50 வயதான அறிய வகை மீன்! 

பிளோரிடாவில் பிடிபட்ட 50 வயதான அறிய வகை மீன்! 

பிளோரிடாவில் 350 பவுண்ட் கனமுள்ள வார்சா குரூப்பர் வகையை சேர்ந்த மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.இந்த மிகப் பிரம்மாண்டமான மீனுக்கு 50 வயது இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.இருக்கிற மீன்இனங்களில் இதுவே அதிக வயதுள்ள மீனாக இருக்கலாம்  என்றும் சொல்லப்படுகிறது. 

சவுத் வெஸ்ட் புளோரிடா கடலில் ~600 அடி ஆழத்தில் இந்த பிரம்மாண்ட வார்சா குரூப்பர் வகை மீன் கண்டெடுக்கப்பட்டது. ஒரு மீனவர் வழக்கம் போல் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது தற்செயலாக இந்த மீன் தூண்டிலில் சிக்கியிருக்கிறது.அதை, நண்பர்களின் உதவியோடு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தபிறகுதான் ஆச்சர்யப்பட்டு தகவல் சொல்லியிருக்கிறார்.

florida

ஃப்ளோரிடாவின் மீன்,வனவியல் பாதுகாப்பு மையம் இந்த தகவலை  வெளியிட்டுள்ளது. மேலும் இதன் புகைப்படங்களை அந்த FWC தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இப்படிப்பட்ட மீன்களின் வயதை கண்டுபிடிக்க இதுபோன்று மீன்கள் பிடிக்கப்படும்போதுதான்தெரிய வருகிறது என்று தெரிவித்திருக்கிறது. 

தவிர, இந்த மீனின் ஓட்டோலித் எனப்படும் காதிலுள்ள கற்கள் ஆய்வு செய்யப்படுவது மிகவும் முக்கியம். இதுபோன்ற அறிய வகை மீன்களிடமிருந்து எடுக்கப்படும் கற்கள் மிகவும் விலைமதிப்பற்றவை!  இந்தவகை வார்சா மீன்கள் மிகவும் நீண்ட முள் (2 வது முள்) கொண்டிருக்கும் இந்த மீன் 10 டார்சல் முள்ளுக்களையும் மற்ற மீங்கள் 11 டார்சல் முள்ளுகளையும் கொண்டிருக்கும்’ மேலும் பெரிய மீன்கள் 180 லிருந்து 1700 அடி ஆழம் வரை போகும் சக்தி கொண்டவை.,இளம் மீன்கள் மேலோட்டமான நீரிலும் கரையின் ஓரங்களிலும் அகப்படும்.

big fish

இந்த வார்சா குரூப்பர்ஸ 1977-ம் ஆண்டிலிருந்து மிகவும் பாதுகாப்பான உயிரினங்களாக கருதப்படுகின்றன.இவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில் ஏற்கனவே அந்தப் பகுதியில் வலை போட்டு மீன் பிடிக்க தடை  செய்யப்பட்டுள்ள நிலையில், தூண்டிலில் சிக்கியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.