“பிளேயிங் 11ல இடம்பிடிக்க எனக்கு வேற வழி தெரியல” – பந்தை எறிந்த பிரித்வி ஷா… முறைத்து பார்த்த ரோஹித் சர்மா!

 

“பிளேயிங் 11ல இடம்பிடிக்க எனக்கு வேற வழி தெரியல” – பந்தை எறிந்த பிரித்வி ஷா… முறைத்து பார்த்த ரோஹித் சர்மா!

இளம்வீரர் பிரித்வி ஷா தன் மீது பந்தை எறிந்தவுடன் ரோஹித் சர்மா முறைத்துப் பார்த்த வீடியோ வைரலாகிவருகிறது. பிளேயிங் 11இல் இடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ரோஹித் மீது பிரித்வி ஷா பந்தை எறிந்தார் என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடிவருகிறது. போட்டியின் நடுவே சைனிக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்குப் பதிலாக பிரித்வி ஷா மாற்று வீரராகக் களமிறங்கினார்.

“பிளேயிங் 11ல இடம்பிடிக்க எனக்கு வேற வழி தெரியல” – பந்தை எறிந்த பிரித்வி ஷா… முறைத்து பார்த்த ரோஹித் சர்மா!

அப்போது ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்தைப் பிடித்த பிரித்வி ஷா இடையில் ரோஹித் சர்மா நிற்பது தெரியாமல் பவுலர் எண்ட்டில் வேகமாக எறிந்தார். அந்த பந்து ரோஹித் சர்மாவைப் பலமாக தாக்கியது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல நல்வாய்ப்பாக அவரது கையில் பட்டது. இருப்பினும், அவரது கையில் காயம் ஏற்பட்டது.

எந்த உள்நோக்கத்துடனும் பந்தை எறியாவிட்டாலும் கோபத்தில் பிரித்வி ஷாவை பார்த்து ரோஹித் சர்மா முறைத்தார். அதன்பின் ஓவர் இடைவேளையில் ரோஹித்திடம் மன்னிப்பு கேட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

நெட்டிசன்கள் பிரித்வி ஷாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். முதல் டெஸ்டில் மோசமான பீல்டிங் செய்ததாலும் சரியாக பேட்டிங் ஆடாததாலும் மற்ற போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

அணியில் பாதி வீரர்கள் காயம் காரணமாக விலகியிருந்து பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனைக் கொண்டு கலாய்த்துவருகின்றனர். காயம் ஆகாமல் இருக்கும் ரோஹித் சர்மாவை காயமாக்கி, பிளேயிங் 11இல் இடம்பிடிக்க தான் பிரித்வி ஷா பந்தை எறிந்தார் என்று கூறி கேலிசெய்துவருகின்றனர் (ஒருவேள இருக்குமோ?).