பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மாணவர்களை பாஜக பாதயாத்திரைக்கு அழைத்து சென்றதாக புகார் !

 

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மாணவர்களை பாஜக பாதயாத்திரைக்கு அழைத்து சென்றதாக புகார் !

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்காக வந்த மாணவர்களை பாஜகவின் பாதயாத்திரை பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்காக வந்த மாணவர்களை பாஜகவின்  பாதயாத்திரை பிரச்சாரத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பாதயாத்திரை நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என மாநகராட்சி அலுவகத்தில் கூடிய போதும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பதால் நிகழ்ச்சி தொடங்க காலதாமதம் ஆனது.

அப்போது அங்கு காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்காக கூடியிருந்தனர். இதை பார்த்த பாஜக நிர்வாகிகள் அந்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தை தங்கள் கட்சி சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதயாத்திரைக்கு அவர்களை அழைத்து சென்றனர்.

bjp

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணிக்கு வந்த என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவமாணவிகளும் பாதயாத்திரையில் கலந்துக்கொண்டனர். எந்த நிகழ்ச்சிக்காக வந்தோம் என புரியாமல் மாணவர்களும் அந்த பாத யாத்திரையில் நடந்து சென்றனர்.

 

சிறிது நேரத்திற்கு நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தனியார் கல்லூரி நிர்வாகிகள் மாணவர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர் ஒருவருக்கு தொடர்பு கொண்டபோது பா.. பாதயாத்திரையில் நடந்து செல்வதாக கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த கல்லூரி நிர்வாகிகள் அங்கேயே நில்லுங்கள் என உத்தரவிட்டுள்ளனர். பின்னர் அங்கு சென்ற கல்லூரி நிர்வாகிகள் மாணவமாணவிகளை மீண்டும் அழைத்து வந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதனால் பா.. நிர்வாகிகளுக்கும், கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.