பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டாம்.. கதறி அழுத உரிமையாளர்..

 

பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டாம்.. கதறி அழுத உரிமையாளர்..

சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தமிழ் நாடு முழுவதும் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஜனவரி மாதம் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஆலைகளும் மூடப்பட்டு விட்டன. அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தமிழ் நாடு முழுவதும் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Plastic bags

அதே போல், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் மேலவீதி, வீரபத்திர சாமி உள்ளிட்ட தெருக்களில் சோதனை மேற்கொண்டனர். அதில், பத்மாவதி என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான குடோனில் 3 டன் பிளாஸ்டிக் பைகள் இருந்ததாகத் தெரிய வந்தது. அதனையடுத்து, சுற்றுச் சூழல் அதிகாரிகள் அனைத்து பிளாஸ்டிக் பையையும் பறிமுதல் செய்தனர். 

Go down

அதிகாரிகளைப் பறிமுதல் செய்ய விடாமல் தடுத்த, குடோன் உரிமையாளர் ராம்நாத் அருகிலிருந்த இரும்பு கதவில் முட்டிக் கொண்டு கதறி அழுதார். கேட்டில் முட்டியதால் அவரின் முகத்திலிருந்து ரத்தம் அதிகமாகக் கசிந்தது. ஏற்கனவே, இது போன்ற பறிமுதல் நடந்துள்ளதால் ராம்நாத்திற்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. 

மீண்டும் பிளாஸ்டிக் விற்பனையில் ஈடுபட்டதால்,எ அவரின் முகத்தில் ரத்தம் வடிவதைக் கூட கண்டுக்கொள்ளாமல் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து கொண்டு சென்று விட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.