பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடா! திருந்தினார்கள் அரசு ஊழியர்கள்!

 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடா! திருந்தினார்கள் அரசு ஊழியர்கள்!

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஏற்கெனவே மூன்று முறைகள் எச்சரித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை வலியுறுத்தியும் விழிப்புணர்வை மேற்கொண்டும், நமது நாடாளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை மத்திய அரசால் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருந்து வந்தது. நாடாளுமன்ற வளாகம் முழுவதும், பிளாஸ்டிக் பாட்டில்கள் சுதந்திரமாக வலம் வந்துக் கொண்டிருந்தன. பிளாஸ்டிக் தடை சட்டத்தை சரியான முறையில் நாடாளுமன்ற வளாகத்தில் செயல்படுத்த முடியாமல் திண்டாடினார்கள். இந்நிலையில் 4வது முறையாக ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தடை விதிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முடிவு செய்தார். 

plastic ban

மக்களவை சபாநாயகரின் இம்முடிவுக்கு பெரும்பாலான எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், எந்தளவுக்கு பிளாஸ்டிக் தடை செயல்படுத்தப்படும் என்பதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விஷயத்தில் முழுமையாக ஒத்துழைப்பு இனிமேலாவது கொடுப்பார்களா என்பதிலும் சந்தேகம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இம்முறை பிளாஸ்டிக் தடை நாடாளுமன்ற வளாகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
மத்திய அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை யை அமலுக்கு கொண்டு வந்தது முதல், ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் அளவுக்கு வாங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் எம்.பிக்களுக்கு புதியதாக தற்போது கண்ணாடி குவளைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில்,  

ohm

ஊழியர்களோ வீட்டிலிருந்து வரும் போதே தங்களுடன் தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து, பணி முடித்து திரும்பச் செல்லும் போது, தங்களுடன்  எடுத்து சென்று விடுகின்றனர். மேலும் நாடாளுமன்ற வளாகம் முழுவதும், தண்ணீர் டிஸ்பன்சர்களை வைக்கவும், அவற்றுடன் காகித கப்புகளை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.