பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு நோ சொன்ன ஆனந்த் மகிந்திரா

 

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு நோ சொன்ன ஆனந்த் மகிந்திரா

நிறுவன கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா.

வாகனம், வேளாண், கட்டுமான கருவிகள் என பல துறைகளில் கொடி கட்டி பறக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பெரும் கோடீஸ்வரர். டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார் ஆனந்த் மகிந்திரா. உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும், தனது அனுபவங்களையும் டிவிட்டரில் மகிந்திரா பகிர்ந்து கொள்வார். டிவிட்டரில் அவரை 70 லட்சம் பேருக்கு மேல் பின்தொடருகின்றனர்.

மகிந்திரா கூட்டம்

சமீபத்தில் ஆனந்த் மகிந்திரா தனது நிறுவன கூட்டத்தின் படத்தை வெளியிட்டு அது குறித்து தகவலை டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார். மகிந்திராவின் பதிவை பார்த்த அவரை டிவிட்டரில் பின்தொடரும் ஒரு பெண்மணி நிறுவன கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் சில்வர் பாட்டில்கள் இருக்கலாம். உங்களது கவனத்துக்காக குறிப்பிடுகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

மகிந்திரா கூட்டம்

அதற்கு ஆனந்த் மகிந்திரா, ஆமாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் தடைசெய்யப்பட வேண்டும். அன்று அவற்றை (பிளாஸ்டிக் பாட்டில்கள்) பார்ப்பதற்கே மிகவும் சங்கடமாக இருந்தது என்று பதில் பதிவு செய்து இருந்தார். மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனந்த் மகிந்திரா தன்னை பின்தொடரும் ஒரு பெண்மணியின் பதிவுக்கு பதில் அளித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.