பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கிய பாம்பு; பதறவைக்கும் வீடியோ

பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கிய பாம்பு; பதறவைக்கும் வீடியோ

ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களும்,பிளாஸ்டிக் பைகளின் தாக்கமும்  உலகம் உலகம் முழுக்கவே அதிகமாகியுள்ளது.மேலும் இவை பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் மிகுந்த பிரச்சனைகளையும் உயிரை குடிப்பவைகளுமாய் திகழ்கின்றன.தவிர, இவை இயற்கையின் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று எவ்வளவு சொன்னாலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைவதாக இல்லை! 

plastic

நமக்கே குப்பைகளை, குப்பைதொட்டியில்தான் போடவேண்டும் என்பதை மறந்து அலட்சியமாக ரோட்டில் வீசிச் செல்கிறோம். ஐந்தறிவுள்ள ஜீவன்களுக்கு எது உணவு,எது பிளாஸ்டிக் என்பதை எப்படி பிரித்துப் பார்க்கத் தெரியும் !? இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பார்ப்பவரை அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு வீடியோவை போஸ்ட் செய்திருந்தார். அதில் பாம்பு ஒன்று  பிளாஸ்டிக் பாட்டிலை விழுங்கி துடித்து கொண்டிருந்தது .அதைக் கவனித்த கிராம மக்கள் அந்தப் பாம்புக்கு உதவி செய்தனர்.

parwin

அந்த பாம்பு பாட்டிலை விழுங்கியதிலிருந்து அதை வெளியேற்றும் வரை மிகுந்த வலியை அனுபவித்தது. மேலும் அவர் ‘இது பாம்பென்றதால் அதுவே பாட்டிலை வெளியே துப்பியது மேலும் வேற மிருகங்களாய் இருந்திருந்தால் இது மிகுந்த சிரமாகி இறந்தே போயிருக்கும்’ என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.

சுற்றுசூழலை பற்றி UN டாட்டா சொல்லுவது ‘ஒரு நிமிடத்தில் வருடம் முழுவதும் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்கப்பட்டும்,5 ட்ரில்லியன்  சிங்கள் யூஸ் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் மொத்தம் 18 மாநிலங்களில் பிளாஸ்டிக் உபயோத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது இதில் தமிழ்நாடும் ஒன்று என்பது சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவுள்ளது. 

முடிந்தவரை பிளாஸ்டிக் பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்துதலை தடை செய்தால் நாம் வாழும் இந்த உலகம் சுத்தமாகவும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் இருக்கும்.இதுவே நாம் நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு செய்யும் மிகப்பெரிய உபகாரமாக அமையும்’. என்று தனது கவலையை சொல்லியிருக்கார்.