பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து பெட்ரோல் கறக்கும் பேராசிரியர்!

 

பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து பெட்ரோல் கறக்கும் பேராசிரியர்!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஷ்-ன் இந்த புதிய முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. இன்னொரு ராமர் பிள்ளையாக இல்லாமல், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சதீஷின் சாதனையை இந்தியாவே கொண்டாட வேண்டும்.

ஹைதராபாத் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறார் சதீஷ். அடிப்படையில் மெக்கானிக்கல் இஞ்சினியரான சதீஷ், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு பெட்ரோல் தயாரித்துவருகிறார். Plastic pyrolysis முறையை பயன்படுத்தி, பெட்ரோல் தயாரித்து அதனை 40லிருந்து 50 ரூபாய்க்கு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவருகிறார். இந்த பெட்ரோலை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Petrol from Plastic

இதுகுறித்து பேராசிரியர் சதீஷ் கூறும்போது “சுற்றுசூழலை பாதுகாக்கவே இதுபோன்ற புதிய முயற்சியை செய்துள்ளதாகவும் லாபத்தை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். Plastic pyrolysis முறை மூலம் 400 கிலோ பிளாஸ்டிக் மூலம் 400 லிட்டர் பெட்ரோல் தயாரிக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஷ்-ன் இந்த புதிய முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. இன்னொரு ராமர் பிள்ளையாக இல்லாமல், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், சதீஷின் சாதனையை இந்தியாவே கொண்டாட வேண்டும்.