பிளாஸ்டிக் தடை… தமிழக அரசுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்

 

பிளாஸ்டிக் தடை… தமிழக அரசுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்

மருந்து, பால் ஆகியவையே அத்தியாவசிய பொருட்களே தவிர, மற்ற நெகிழி பொருட்களுக்கும் தடைவிதித்தால் தான் மாசடைவது தடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மருந்து, பால் ஆகியவையே அத்தியாவசிய பொருட்களே தவிர, மற்ற நெகிழி பொருட்களுக்கும் தடைவிதித்தால் தான் மாசடைவது தடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்திருந்தது.  இந்நிலையில், இந்த தடையை நீக்க வலியுறுத்தி 70-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. 

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஆவின் பாலை நெகிழி உறைக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை ஊக்குவிக்க வேண்டும். கடுமையான அபராதம் விதிக்காவிட்டால் நெகிழி பொருட்கள் மீதான தடை முழுமையாக இருக்காது.  நெகிழி மெல்ல மெல்ல நம் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவி, சுற்றுச்சூழலுக்கு சாவு மணி அடித்துள்ளது.

பிளாஸ்டிக் குப்பையை அப்புறப்படுத்து இமாலய இலக்காக உள்ளது. நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவை நெகிழி பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், அரசு ஆகியோர் மெல்ல மெல்ல சிந்தித்து நெகிழி பயன்பட்டிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பை காட்டி உலகை காப்பதற்கு முன்வந்துள்ளனர்.

நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவு காகிதத்தில் மட்டும் இல்லாமல், கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நெகிழி பயன்படுத்தினால் கடுமையான அபராதத்தை அரசு விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நெகிழி பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.