பிளாஸ்டிக் தடையை மீறினால் 1 லட்சம் வரை அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை; அபராதம் குறித்த முழு விவரம் இதோ!

 

பிளாஸ்டிக் தடையை  மீறினால் 1 லட்சம் வரை அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை; அபராதம் குறித்த முழு விவரம் இதோ!

பிளாஸ்டிக் தடையை மீறினால் 1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: பிளாஸ்டிக் தடையை மீறினால் 1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.அதில், குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமான ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

plastic

தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தலுக்கான அபராதம்:-

சிறிய வணிக விற்பனையாளர்கள்:

முதல் தடவை – 100 ரூபாய்  

இரண்டாம் முறை 200 ரூபாய்  

நடுத்தர வணிக நிறுவனங்கள் (மளிகைக்கடைகள் மற்றும் மருந்துக் கடைகள்)

முதல் தடவை 1000 ரூபாய் 

இரண்டாம் தடவை 2000 ரூபாய் 

மூன்றாம் தடவை 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் 

plastic

வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் 

முதல் தடவை 10 ஆயிரம் ரூபாய் 

 இரண்டாம் தடவை 15 ஆயிரம் ரூபாய் 

 மூன்றாம் தடவை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் 

பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை ரூ.1 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.