பிளாஸ்டிக் செங்கல… சேலம் மாணவர்களின் புது முயற்சி!

 

பிளாஸ்டிக் செங்கல… சேலம் மாணவர்களின் புது முயற்சி!

சேலத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செங்கல்லை வடிவமைத்துள்ளனர். இது வழக்கமான செங்கல்லைப் போல உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 
பிளாஸ்டிக்கை ஒழிப்பது எப்படி என்று தெரியாமல் அரசுகள் விழித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சில கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.

சேலத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செங்கல்லை வடிவமைத்துள்ளனர். இது வழக்கமான செங்கல்லைப் போல உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 
பிளாஸ்டிக்கை ஒழிப்பது எப்படி என்று தெரியாமல் அரசுகள் விழித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சில கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இதனால், கடல் மாசடைவதுடன், மீன், ஆமை போன்ற கடல் வாழ் தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில வகை பிளாஸ்டிக் கவர்களுக்கு தமிழக அரசு தடை செய்தும் இன்னும் மக்களால் பயன்படுத்தப்பட்டே வருகிறது. முழு பிளாஸ்டிக் தடை வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

plastic brick

எளிதில் மக்காத பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டது. ஆனாலும், பெரிய அளவில் அது நடைமுறைக்கு வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில், மலைபோல குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செங்கல்லைத் தயாரிக்கலாம் என்று சேலம் கல்லூரி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைக்கு மண் தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில், செங்கல், சிமெண்ட் கல்லில் பிளாஸ்டிக் கழிவை பயன்படுத்தலாம் என்று சூரமங்களத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றன. “பிளாஸ்டிக் கவர், பெட் பாட்டலை தூள் தூளாக செய்து. அவற்றுடன் மணல், சிமெண்டை பயன்படுத்தி செங்கல் செய்யலாம். இந்த செங்கல் உறுதியானது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. இந்த கண்டுபிடிப்பை அறிவுசார் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம்.
இந்த புதியவை பிளாஸ்டிக் செங்கல் விலையும் குறைவு. இதைப் பயன்படுத்தி பெரிய வீடுகளை குறைந்த செலவில் கட்ட முடியும். காப்புரிமை கிடைத்த உடன் வணிக ரீதியாக இந்த செங்கல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்”  என்று கல்லூரியின் பேராசிரியர் மாலதி தெரிவித்துள்ளார்