பிளாஸ்டிக்கால் உயிரிழந்த மான்! வயிற்றுக்குள் இருந்த 7 கிலோ பிளாஸ்டிக்!!

 

பிளாஸ்டிக்கால் உயிரிழந்த மான்! வயிற்றுக்குள் இருந்த 7 கிலோ பிளாஸ்டிக்!!

தாய்லாந்தில் உயிரிழந்துகிடந்த மானின் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் பாங்காக்கில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள நன் என்ற வனப்பகுதியில் மான் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற வனத்துறையினர் மானை மீட்டு, அதன் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதனை உடற்கூராய்வு செய்ததில் அதன் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள், துணிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை உட்கொண்டதே மானின் உயிரிழப்பு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

deer

தாய்லாந்தில் தனி மனிதர் ஒருவர் ஆண்டுக்குச் சுமார் 3,000 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார். அந்த பிளாஸ்டிக் பைகளை வன விலங்குகளும், நீர்வாழ் உயிரினங்களும் உட்கொள்வதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது உயிரிழந்த அந்த மானுக்கு 10 வயது என்பதும் தெரியவந்துள்ளது. மானின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளாக இருக்கும்நிலையில் பிளாஸ்டிக்கால் ஒரு மான் 10 ஆண்டுகளிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.