பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சூறாவளி புயல் ‘கம்முரி’: வீடுகளின்றி தவிக்கும் 90,000 மக்கள்!

 

பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய சூறாவளி புயல் ‘கம்முரி’: வீடுகளின்றி தவிக்கும் 90,000 மக்கள்!

பிலிப்பைன்ஸின் லுசொன் தீவை கம்முரி என்னும் சூறாவளி புயல் நோக்கி வருவதால் நேற்று அங்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

பிலிப்பைன்ஸ் நாட்டை இந்த ஆண்டிலேயே 19 முறை சூறாவளி புயல் தாக்கியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு வந்த ரம்மசன் சூறாவளி 106 பேரைக் கொன்றது.

ttn

அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸின் லுசொன் தீவை கம்முரி என்னும் சூறாவளி புயல் நோக்கி வருவதால் நேற்று அங்கு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த புயல் மணிக்கு 150 முதல் 200 கி.மீ வரை சூறாவளிக் காற்று வீசி பலத்த புயலாக மாறும் என்று  பிலிப்பீன்ஸ் வானிலை ஆய்வகம் தெரிவித்திருந்தது. 

ttn

அந்நாட்டின் மத்திய பகுதியான Daete-யை நேற்று இரவு,  கம்முரி புயல் 155 முதல் 190 கி.மீ வேகத்தில் காற்று வீசி தாக்கியதில் அப்பகுதியில் இருந்த அனைத்து வீடுகளின் மேற்கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. இந்த புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்த 90,000 மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ttn

 கம்முரி புயல் இன்று பிற்பகலுக்குள் தலைநகர் மணிலா வழியே மேற்கு கடற்கரை நோக்கிச் செல்லும் என்று அம்மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் நேற்று விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று Aquino சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 20 ஆவது முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் தாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.